பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தலைமை தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

Posted On: 04 SEP 2022 4:00PM by PIB Chennai

ராணுவத் தலைமை தளபதி  ஜென்ரல் மனோஜ் பாண்டே, 2022 செப்டம்பர் 05 முதல் 08 வரை நேபாளத்திற்குப்  பயணம் செய்ய உள்ளார். ராணுவத் தலைமை தளபதியாக நேபாளத்திற்கு  அவரது முதல் பயணம் இதுவாகும். ராணுவத் தலைமை தளபதி தமது பயணத்தின் போது, நேபாள அதிபர், நேபாள பிரதமர் மற்றும் நேபாள ராணுவத் தளபதி ஆகியோரை சந்திப்பார். மேலும் அந்நாட்டின் மூத்த ராணுவம் மற்றும் சிவில்  தலைமையுடனான சந்திப்பைத் தவிர. இந்தியா-நேபாள பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் அவர் விவாதிப்பார்.

இரு ராணுவங்களுக்கும் இடையேயான நட்புறவின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு நேபாள ராணுவத் தளபதியின் கெளரவ ஜென்ரல் பதவி வழங்கும் விழா  2022 செப்டம்பர்  05 அன்று நேபாள அதிபரின்  அதிகாரபூர்வ இல்லமான சிடால் நிவாஸில் நடைபெறும். நேபாள இராணுவத் தலைமையகத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ள இந்திய ராணுவத் தலைமை தளபதி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். நேபாள ராணுவத்தின் மூத்த தலைமையுடன் கலந்துரையாடுவார். தமது பயணத்தின் போது, ஷிவ்புரி ராணுவக் கல்லூரியின்  மாணவ அதிகாரிகள், நேபாள ராணுவக் கமாண்ட்  மற்றும் ஆசிரியர்களுடன் இந்திய ராணுவத் தலைமை தளபதி கலந்துரையாடுவார். இந்திய ராணுவத் தலைமை தளபதி நேபாளத்தின் மாண்புமிகு பிரதமரை 2022 செப்டம்பர் 06 அன்று சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளார்.

இந்தியா - நேபாள உறவுகள்  பரஸ்பர மதிப்பு  மற்றும் நம்பிக்கைக்கு அப்பால்,வரலாற்றுச் சிறப்புமிக்கது, பன்முகத்தன்மை வாய்ந்தது, பொதுவான கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளால் குறிக்கப்படுவது. நேபாளத்துடனான தனது உறவுக்கு இந்தியா அதன் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ மற்றும் ‘கிழக்கு நடவடிக்கை’ கொள்கைகளின்படி அதிக முன்னுரிமை அளிக்கிறது. இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை ஆய்வு செய்யவும், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்தப்  பயணம் வாய்ப்பளிக்கும்.

**************



(Release ID: 1856661) Visitor Counter : 633