வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
எட்டு முக்கியத் தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த குறியீடு, ஜுலை 2021உடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது
प्रविष्टि तिथि:
31 AUG 2022 5:08PM by PIB Chennai
எட்டு முக்கியத் தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த குறியீடு, ஜுலை 2021உடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம்(தற்காலிகமாக) அதிகரித்துள்ளது. நிலக்கரி, சுத்திகரிப்பாலை பொருட்கள், உரம், எஃகு, மின்சாரம் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளின் உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜுலை 2022ல் அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட சில நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பாலை பொருட்கள், உரங்கள், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சார உற்பத்தி ஆகிய எட்டு ஆலைகளின் உற்பத்தி, ஒருங்கிணைந்த மற்றும் தனி செயல்பாடு அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எட்டு முக்கியத் தொழில் நிறுவனங்களிலும், ஏப்ரல் 2022க்கான இறுதி வளர்ச்சி வீதக் குறியீடு, அதன் தற்காலிக அளவான 8.4%-லிருந்து 9.5% ஆக இருக்கும் என திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஐசிஐ வளர்ச்சி வீதம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2022-23ல் 11.5%(P) ஆக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855784
**************
(रिलीज़ आईडी: 1855868)
आगंतुक पटल : 211