உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, “CAPF eAwas“ வலைதளத்தை, புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 31 AUG 2022 4:42PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, மத்திய ஆயுதக் காவல் படையினருக்கான  வலைதளத்தை, புதுதில்லியில் நாளை (1.9.2022) தொடங்கி வைக்க உள்ளார்.   பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு,  மத்திய ஆயுதக் காவல் படை (CAPFs) வீரர்களுக்கான வீட்டுவசதி நிறைவு விகீதத்தை(HSR) அதிகரிப்பதை, அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக மேற்கொண்டு வருகிறது.   வீட்டுவசதி நிறைவு வீதத்தை அதிகரிக்க,  புதிய வீடுகளைக் கட்டுவது தவிர,  மத்திய ஆயுதக் காவல் படையினருக்கான தற்போதைய வீடு ஒதுக்கீட்டுக் கொள்கையையும் மாற்றியமைப்பதன் மூலம், ஒரு படையினருக்கான வீடு காலியாக இருந்தால், அதனை பிற படைகளில் உள்ள வீடு தேவைப்படும் வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது.    மாற்றியமைக்கப்பட்ட  ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்தவும், ஒதுக்கீட்டு நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும்,  துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புகளை ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யவும்,  மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ்  படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்திரின் குடும்பத்தினர் தங்குவதற்கான குடியிருப்புகளை ஒதுக்கவும் “CAPF eAwas“ என்ற பெயரில் பொதுவான வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த வலைதளம், தகுதிவாய்ந்த மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் தங்குவதற்கான குடியிருப்பு / வீரர்களின் குடும்பத்தினர்  தங்குவதற்கான குடியிருப்பு ஒதுக்கீட்டிற்காக, ஆன்லைனில் பதிவு செய்ய வகை செய்யும்.  

இந்த வலைதளம், ஆயுதக் காவல் படையினருக்கான குடியிருப்புகளில், காலியாக உள்ள வீடுகள் பற்றிய துல்லியமான கணக்கெடுப்புக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855776

*************


(Release ID: 1855810) Visitor Counter : 200