இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டுகள் தினத்தன்று திரு தர்மேந்திர பிரதான், திரு அனுராக் சிங் தாக்கூர், திரு நிஷித் பிரமாணிக் ஆகியோர் விளையாட்டு வீரர்கள் உடல்தகுதி ஆளுமைகள் ஆகியோருடன் கலந்துரையாடினர்

Posted On: 29 AUG 2022 9:52PM by PIB Chennai

நாடு முழுவதும் தேசிய விளையாட்டுகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை இணையமைச்சர் திரு நிஷித் பிரமாணிக் ஆகியோர் விளையாட்டு வீரர்கள் உடல்தகுதி ஆளுமைகள் ஆகியோருடன் கலந்துரையாடினர்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விளையாட்டுக்களை பிரபலபடுத்தவும், விளையாட்டு ஆளுமைகளை வளர்க்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கூறினார். தேசிய கல்விக் கொள்கை 2020,  பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டுக்களை கொண்டுள்ளது என்றும், விளையாட்டுக்களை ஒருங்கிணைத்த கற்றல் முறைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதே போல் வாழ்நாள் அணுகுமுறையாக உடல்தகுதியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 திரு அனுராக்சிங் தாக்கூர் பேசுகையில், நமது பிரதமரின் தொலைநோக்கிற்கு ஏற்ப விளையாட்டுகளின் குவி மையமாகவும், விளையாட்டுளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இந்தியா மாறும் காலம் வந்துள்ளது என்றார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்களின் வெற்றிகள் இதனை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

 இந்த கலந்துரையாடலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் நிக்கத் ஜரின், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ன் மாற்றுத்திறனாளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பவினா பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 தேசிய விளையாட்டுகள் தினம் முதன் முறையாக இந்த ஆண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மாணவர்களிடையே விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஜம்முவில் இருந்து திருவனந்தபுரம் வரை நாடு முழுவதும் 26 விளையாட்டு ஆளுமைகள், 26 பள்ளிகளுக்கு சென்றிருந்தனர்.

 பள்ளிகளுக்கான உடல்தகுதி இந்தியாவின் இரண்டாவது வினாடி-வினா போட்டி தொடங்குவது பற்றிய அறிவிப்பு இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.  இதற்கான பதிவு செப்டம்பர் 3-ல் தொடங்கி, அக்டோபர் 15 வரை நடைபெறும்.  வினாடி-வினாவுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3.25 கோடியாகும்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855353

***************


(Release ID: 1855408)