அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவில் தோல் உற்பத்தி தொழிலின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
29 AUG 2022 5:55PM by PIB Chennai
இந்தியாவின் தோல் உற்பத்தி தொழில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில் முனைவோருக்கு உலகத்தர வாய்ப்புகளை அளிப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி- மத்திய தோல் ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் மெயின்புரியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே அவர் உரையாற்றினார். இளைஞர்களிடம் தோல் உற்பத்திக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஈடுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் உள்ள தோல் உற்பத்தி நிறுவனம் அதிகளவிலான ஏற்றுமதி வருவாயை ஈட்டிவருவதாகவும், நாட்டின் அன்னிய செலாவணியை ஈட்டும் முதல் 10 துறைகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
கான்பூரில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் தோல் மற்றும் அத்துறைச்சார்ந்த கணக்கெடுப்பு, பயிற்சி, செயல்முறை விளக்கம், வர்த்தகக் கலந்தாய்வு, தொழில் மற்றும் தையல் பயிற்சி திட்டங்கள், ஆலோசனை உதவிகள் ஆகியவை மெயின்பூரி மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் உறுதியளித்தார்.
இந்தியா, உலகில் காலணி உற்பத்தி மற்றும் தோல் ஆடைகள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்திலும், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் ஜந்தாம் இடத்திலும் இருப்பதாக அவர் கூறினார். 2022ம் ஆண்டு சர்வதேச அளவில் தோல் பொருட்களின் சந்தை மதிப்பு 424 பில்லியன் டாலராக உள்ளது என்றும், இது 2030ம் ஆண்டுக்குள் 744 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855301
***************
(Release ID: 1855301)
(Release ID: 1855309)
Visitor Counter : 171