புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்த பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்கள் சேர்ந்ததன் மூலம் தற்போது நடைபெற்று வரும் இந்தியா முழுவதற்குமான கடற்கரை தூய்மை இயக்கம் அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 28 AUG 2022 3:21PM by PIB Chennai

மூத்த பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்கள் சேர்ந்ததன் மூலம் தற்போது நடைபெற்று வரும் இந்தியா முழுவதற்குமான 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது செப்டம்பர் 17 அன்று நிறைவடைகிறது.

 

மத்திய  அறிவியல், தொழில்நுட்பம்,  புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சர் (தனி பொறுப்பு),  பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு,  ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித் துறை இணையமைச்சர்

டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார். இந்த மாபெரும் வரவேற்பால் உத்வேகம் பெற்றுள்ள  அவர் தூய்மை இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த www.swachhsagar.org என்ற தனியான இணையதளத்தை   இன்று தொடங்கி வைத்தார். 

 

தற்போது நடைபெற்றுவரும் இந்த இயக்கம் குறித்து ஊடகவியலாளர்களிடையே பேசிய அமைச்சர், இந்த  இயக்கத்தை செயல்படுத்திவரும் புவி அறிவியல் அமைச்சகத்தோடு சுற்றுச்சூழல்,  வனம் மற்றும் பருவநிலை மாற்றம், ஜல் சக்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், வெளியுறவு, தகவல் ஒலிபரப்பு ஆகிய  அமைச்சகங்களும் தீவிரமாக பங்கேற்றுள்ளன என்றார்.  அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட முழுமையான ஆதரவு அளிக்க உறுதி தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார். புதுச்சேரியில் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற கடற்கரை தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

2022 ஜூலை 5 அன்று தொடங்கப்பட்ட இந்த 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கத்தின் முதல் 20 நாட்களில் கடற்கரைகளிலிருந்து 200 டன் கழிவுகள் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். 

 

இதுவரை நடைபெற்ற இயக்கத்தில்  24 மாநிலங்களைச் சேர்ந்த 52,000க்கும் அதிகமான தொண்டர்கள் பதிவு செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். 'தூய்மையான கடல், பாதுகாப்பான கடல்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த இயக்கம் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான 2022 செப்டம்பர் 17 அன்று நிறைவடைவதாக அவர் தெரிவித்தார். 

 

சேவா தினம் என கொண்டாடப்படும்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளாகவும் இருக்கும் இந்த நாளில்  நாடு முழுவதும் உள்ள 75 கடற்கரைகளில் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 75 தொண்டர்கள் என பங்கேற்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த இயக்கம்  தேச சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக்  குறிக்கும் அமிர்தப் பெருவிழாவோடும் இணைந்திருப்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855024

***************




(Release ID: 1855070) Visitor Counter : 167