அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவில் புதிய தொழில்களுக்கு புதிய வழியாக " கழிவுகளிலிருந்து செல்வம்" என்பது உருவாகி வருகிறது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்
Posted On:
27 AUG 2022 6:27PM by PIB Chennai
இந்தியாவில் புதிய தொழில்களுக்கு புதிய வழியாக " கழிவுகளிலிருந்துசெல்வம்" என்பது உருவாகி வருகிறது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஜம்முவில் கூறினார்
"ஏக் காம் தேஷ் கே நாம்" திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட "கழிவுகளிலிருந்து செல்வம்" என்ற தேசிய கருத்தரங்கில் அமைச்சர் உரையாற்றினார். இதில் புதிய தொழில்களுக்கு வணிகத்தையும் வாழ்வாதாரத்தையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்க கேரளா முதல் ஹரியானா வரையும் குஜராத் முதல் ஒடிசா வரையும் என இந்தியா முழுவதும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் சிறந்து விளங்கிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டப்பட்டனர்.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெற்ற "தூய்மைக்கான " அழைப்பு மற்றும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் பருவநிலை தொடர்பான மோடியின் அக்கறை முதன்மைப் பங்கு வகிப்பதையும் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், கழிவுகளிலிருந்து செல்வம் என்ற நடைமுறை சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமின்றி செல்வத்தையும் உருவாக்கி இரட்டை நோக்கத்திற்கு உதவுகிறது என்றார். , கடந்த ஆண்டு அக்டோபரில் காந்தி ஜெயந்தியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தின் போது, புது தில்லியில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட செல்பேசிகள் கணினிகள் போன்றவற்றில் இருந்து மின்னணு குப்பைகளை சந்தைக்கு எடுத்துச் சென்றபோது ரூ.62 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டது என்பதையு சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1854855
•••••••••••••
(Release ID: 1854883)
Visitor Counter : 154