இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16 வயதுக்குட்பட்டோருக்கான கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் முதல் பிரிவில் ப்ரீத்தம் சிவாச் அகாடமி முதலிடம் பிடித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 23 AUG 2022 6:48PM by PIB Chennai

16 வயதுக்குட்பட்டோருக்கான கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் முதல் பிரிவில் ப்ரீத்தம் சிவாச் அகாடமி முதலிடம் பிடித்தது.  மேஜர் தயானந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் குல்தீப் சிவாச் பயிற்சி அளித்த அணியினர் 7 போட்டிகளிலும் வென்றனர். அவர்கள் 21 புள்ளிகளைப் பெற்றனர்.

     ஹரியானாவின் ஹர் ஹாக்கி அகாடமி இரண்டாவது இடத்தையும், மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

     முதல் பிரிவு போட்டிகள் நடைபெற்ற 7 நாட்களில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடைபெற்றன.  இதில் 16 அணிகள் பங்கேற்றன.

     16 வயதுக்கு உட்பட்டோருக்கான கேலோ இந்தியா மகளிர் ஹாக்கி லீக் பிரிவு இரண்டு போட்டிகள் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளன.  

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1853926

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1853950) வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu