பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊராட்சிகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் சண்டிகரில் நாளை தொடங்கிவைக்கப்படுகிறது

Posted On: 21 AUG 2022 6:39PM by PIB Chennai

கருப்பொருள் அணுகுமுறைகள் மூலம் ஊராட்சிகளில் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நாளை பஞ்சாபின் சண்டிகரில் தொடங்குகிறது.

நாளை நடைபெறும் தொடக்க விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் திரு  பகவந்த் சிங் மான், மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1300 தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பயிலரங்கில் கலந்துகொள்வார்கள். தேசிய பயிலரங்கில் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கின்றன.

சாலைகள், குடிநீர், சுகாதாரம், தெருவிளக்குகள், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள், பொது சேவை மையம், உள்ளூர் சந்தைகள், அங்கன்வாடி மையங்கள், கால்நடை உதவி மையம், சமூக மையம் ஆகிய பகுதிகளில் தன்னிறைவான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் அடிப்படை சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் ஊராட்சிகள், அவர்களின் அனுபவங்கள் மற்றும் புதுமையான மாதிரிகள், உத்திகள், அடிமட்டத்தில் தன்னிறைவான உள்கட்டமைப்பு கொண்ட கிராமங்களின் கருப்பொருளை நிறுவனமயமாக்குவதற்கான அணுகுமுறைகளை வெளிப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு தளம் இதன் மூலம் கிடைக்கும்.

தேசியப் பயிலரங்கில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வெவ்வேறு கருப்பொருள்களில் அடிமட்ட அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறுவனமயமாக்குவதற்கான புதுமையான மாதிரிகள், உத்திகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி பகிர்ந்து கொள்ளும். புதுப்பிக்கப்பட்ட தேசிய பஞ்சாயத்து விருதுகள் பற்றிய விரிவான விளக்கமும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1853450

 ***************


(Release ID: 1853469) Visitor Counter : 248