பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெறும் பிட்ச் பிளாக் 2022 ராணுவ பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்கிறது

प्रविष्टि तिथि: 19 AUG 2022 6:40PM by PIB Chennai

டார்வினில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் பிட்ச் பிளாக் 2022 ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப்பிரிவு ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆஸ்திரேலிய விமானப்படையால் பல நாடுகளின் பங்கேற்புடன் இந்தப் பயிற்சி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த முறை இந்தப் பயிற்சி 2018ல் நடைபெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2020க்கான பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பயிற்சியில் பல்வேறு விமானப்படைகளைச் சேர்ந்த 100 போர் விமானங்களும், 2500 ராணுவ வீரர்களும் பங்கேற்கிறார்கள்.

அணித்தலைவர் ஒய்பிஎஸ் நேகி  தலைமையிலான இந்திய விமானப்படையின் அணியில் 100 விமாப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர். சூ-30 எம்கேஐ விமானப்படை விமானங்கள் நான்கும், சி -17 போர் விமானம் இரண்டும் இடம்பெற்றுள்ளன.

***************


(रिलीज़ आईडी: 1853197) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी