பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

வியட்நாம் - இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி நிறைவு

Posted On: 18 AUG 2022 5:28PM by PIB Chennai

வியட்நாம் - இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி (வின்பேக்ஸ்) கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஹரியானாவின் சந்திமந்திரில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில், பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஐநா அமைதி குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது. வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் ராணுவ பயிற்சி இதுவாகும். இரு நாட்டு வீரர்களுக்கும் கருத்தியல் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்பிக்கப்பட்டன. இன்று நடந்த பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் திரு பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் 2023 ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852904

 

***************(Release ID: 1852957) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Hindi