பாதுகாப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் & கருவிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் புதுதில்லியில் ராணுவத்திடம் ஒப்படைத்தார்
Posted On:
16 AUG 2022 3:45PM by PIB Chennai
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் & கருவிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதுதில்லியில் இன்று (16.08.2022) இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
எதிர்கால காலாட்படை சிப்பாய்க்கான சாதனம் (F-INSAS), உள்ளிட்ட புதிய தலைமுறை கண்ணிவெடியான நிபுன், மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனங்கள், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்தும் என திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1852259
***************
(Release ID: 1852345)