உள்துறை அமைச்சகம்

1947ல் ஏற்பட்ட பிரிவினை கொடுமையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு பிரிவினை கொடுமை நினைவு தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை

Posted On: 14 AUG 2022 12:37PM by PIB Chennai

பிரிவினை கொடுமை  நினைவு தினத்தில், 1947ல் பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா,மரியாதை செலுத்தியுள்ளார்.

திரு அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "1947ல் நடந்த நாட்டின் பிரிவினையால் ஏற்பட்ட   இந்திய வரலாற்றின் மனிதாபிமானமற்ற அத்தியாயத்தை என்றும் மறக்க முடியாது. பிரிவினையின் வன்முறை மற்றும் வெறுப்பு லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்றதுடன், எண்ணற்ற மக்கள் இடம்பெயரக் காரணமானது. பிரிவினையின் கொடூர நினைவு தினமான இன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

பிரிவினையின் போது மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் வலிகளை நாட்டின் இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதாகவும், நாட்டில் எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாட்டு மக்களை ஊக்குவிக்கவும் இந்த நினைவு தினம் அமையும்" என்றும் கூறியுள்ளார்.  

**************(Release ID: 1851730) Visitor Counter : 195