நிலக்கரி அமைச்சகம்
இல்லம் தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தை கொண்டாடும் வகையில் மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தேசியக் கொடியை ஏற்றினார்
Posted On:
13 AUG 2022 5:52PM by PIB Chennai
மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இல்லம் தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தை முன்னெடுத்து தேசியக் கொடியை ஏற்றினார். நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்/கீழ்நிலை அலுவலகங்களின் ஊழியர்களும் தங்கள் வீடுகளிலும், நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும் தேசியக் கொடியை ஏற்றினர். நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றினர். நாட்டுப்பற்று உணர்வுடனும், ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இந்தப் பிரச்சாரத்தை பெரிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் சுதந்திரத்தின் 75 புகழ்பெற்ற ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் நடந்து வரும் விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த சுதந்திர தினத்தில் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியின் வழிகாட்டுதலின் கீழ், மூவண்ணக்கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், மற்றும் தொழிலாளர்களுக்கு தேசியக் கொடி விநியோகிக்கப்பட்டது. கொடியுடன் தங்களுடைய புகைப்படங்கள்/செல்ஃபிகளை இடுகையிடவும், அவற்றை கலாச்சார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றவும் பணியாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
***************
(Release ID: 1851614)
Visitor Counter : 213