சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

உலக யானைகள் தினம் - 2022 பெரியாறில் கொண்டாடப்பட்டது

Posted On: 12 AUG 2022 4:22PM by PIB Chennai

கேரளாவின் பெரியாறில், உலக யானைகள் தினம் - 2022, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான துறை  அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ், இணையமைச்சர் திரு. அஷ்வினி குமார் சௌபே மற்றும் கேரள வனம் மற்றும் வனவிலங்குகள் துறை அமைச்சர் திரு.ஏ.கே.சதீந்தரன் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

“இந்தியாவில் யானைகளின் இருப்பிடங்கள் குறித்த வரைபடம்”, “இந்தியாவில் யானைகள் வசிப்பிடம் மற்றும் அவை நடமாடும் வழித்தடங்கள் குறித்த விவரங்கள்” - “யானைகள் பராமரிப்பு, முகாம்களில் ஆரோக்கியம் மற்றும் நலன் பராமரிப்பு” மற்றும் “டிரம்பெட்” இதழின் சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

யானைகள் திட்டம், 30 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூரும் வகையில், இந்தியாவில் யானைகளின் பாதுகாப்புக் குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், யானைகளுடனான எங்களின் தொடர்பு பழமையானது, மதிப்புமிக்கது மற்றும் போற்றத்தக்கது என்று கூறினார்.

யானைகள் நமது வனவிலங்குகளின் வாழ்வாதாரத்துக்கும்,  மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கும் மிகவும் இன்றியமையாதவை என்று தெரிவித்தார்.  

இந்தியாவில் யானைகளை பாதுகாப்பதில், மக்களின் நலன்களே முக்கியம் என்பதை அரசு அங்கீகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடுக்கியிலுள்ள கட்டப்பனாவில், 1000 படுக்கை வசதிகள் கொண்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851260

                             ***************



(Release ID: 1851344) Visitor Counter : 221


Read this release in: Punjabi , English , Urdu , Hindi