பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய கண்காணிப்பு ஆணையர் திரு சுரேஷ் என் படேல், மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து அண்மை காலங்களில் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது பற்றி விளக்கினார்

Posted On: 11 AUG 2022 5:04PM by PIB Chennai

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய கண்காணிப்பு ஆணையர் திரு சுரேஷ் என் படேல், மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து அண்மை காலங்களில் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது பற்றி விளக்கினார்.  அவருடன், கண்காணிப்பு ஆணையர்கள் திரு அரவிந்த் குமார், திரு பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் சந்தித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான ஒழுங்குமுறை நடவடிக்கை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது குறித்த விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்தார்கள். 

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாக 2,099 ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவகாரங்கள் நிலுவையில் இருந்தது.  2020 ஆம் ஆண்டு ஆணையம் ஏற்பாடு செய்த சிறப்பு ஏற்பாடு மூலம் 30.06.2022 அன்று நிலவரப்படி அது 227-ஆகக் குறைந்துள்ளது என்று மத்திய கண்காணிப்பு ஆணையர் திரு படேல், டாக்டர். ஜிதேந்திர சிங்கிடம் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1850944

***************


(Release ID: 1851021) Visitor Counter : 148
Read this release in: English , Urdu , Hindi , Hindi