மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் மூலம் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான உள்ளீடுகளைப் பெறுவதற்கு மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தைக் கல்வி அமைச்சகம் நடத்தியது
Posted On:
09 AUG 2022 5:13PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில் புதிய தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை (என்சிஎப் ) மேம்படுத்த பரவலான ஆலோசனை நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல, மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் என்சிஇஆர்டி, இந்திய தேர்தல் ஆணையம், ஐசிஏஆர், டிஆர்டிஓ போன்ற முக்கிய அமைப்புகளின் மூத்த அதிகாரிகள்/பிரதிநிதிகளுடனான கூட்டத்தைக் கல்வி அமைச்சகம் நடத்தியது. கூட்டத்திற்கு கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திருமதி அனிதா கர்வால் தலைமை தாங்கினார். கற்கும் மாணவர்களின் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் அவர்களின் வளர்ச்சித் தேவைகள் மற்றும் நலன்களுக்குப் பதிலளிக்கக்கூடிய மற்றும் பொருத்தமான ஒரு பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் அமைச்சகங்களும் நிறுவனங்களும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதில் அவர் கவனத்தை ஈர்த்தார்.
தொடக்கநிலை குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், திறமை அடிப்படையிலான கல்வி, உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத்தன்மை, பாடத்திட்டத்தை அடிப்படைத் தேவை அளவுக்குக் குறைத்தல், தொழில்சார் கல்வியை மறுவடிவமைப்பு செய்தல், மையத்திறன்கள் மற்றும் உள்ளடக்கத்தை அடையாளம் காணுதல், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, பன்மொழி இயல், இந்திய அறிவை ஒருங்கிணைத்தல், குடியுரிமை, தேசிய பாரம்பரியத்தைப் போற்றுதல், பொதுச் சொத்துக்கான மரியாதை, பெரியவர்களை கவனித்துக்கொள்வது, சேவை மனப்பான்மை, திறமையான குழந்தைகளின் தேவைகள், அனுபவக் கற்றல், பொம்மைகள், கைவினை மற்றும் கலைகளின் ஒருங்கிணைப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக் கல்வி வழிகாட்டுதல் மற்றும் மனநல ஆலோசனை, சமூக ஈடுபாடு போன்றவை இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850271
**************
(Release ID: 1850294)