அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்திய-அமெரிக்க கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கான சிறந்த வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் விவாதம்

Posted On: 09 AUG 2022 4:52PM by PIB Chennai

டிஎஸ்டி-என்எஸ்எஃப் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த பயிலரங்கில்,   தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள்  மூலம் செயல்படுத்தப்படும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கான சிறந்த வழிமுறைகளை வெளிக்கொணர, இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்கள் விவாதித்துள்ளனர்.

டிஎஸ்டி-யுடன் இணைந்து தில்லி ஐஐடி ஏற்பாடு செய்திருந்த இந்தப்பயிலரங்கில் இந்திய- அமெரிக்க நிபுணர்கள் பங்கேற்று, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர். 

டிஎஸ்டியின் மூத்த ஆலோசகர் டாக்டர் அகிலேஷ் குப்தா, அமெரிக்கா எங்களின் இயற்கையான பங்குதாரர். குறிப்பாக அறிவியலில் நாங்கள் பாரம்பரியமாக கூட்டு சேர்ந்துள்ளோம், கூட்டுத் திட்டங்களின் மூலம் நிறுவன அளவில், அரசு மட்டத்தில் மற்றும் மக்கள் மட்டத்தில் கூட ஈடுபாடு மிகவும் ஆழமாக இருக்கும்,” என்று கூறினார்.

ஆறு தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் என்எஸ்எப் ஆதரவு நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் இரு நாடுகளிலும் இருக்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு சர்வதேச ஒத்துழைப்பின் கூறுகளை சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவுடன் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் அமெரிக்கா உறுதியுடனும் பெருமையுடனும் உள்ளது. இந்தத் திட்டங்கள் அபிலாஷைக்குரியதாகவும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று என்எஸ்எப் இயக்குநர் டாக்டர். சேதுராமன் பஞ்சநாதன் கூறினார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850267   

*******



(Release ID: 1850284) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi , Telugu