ஜல்சக்தி அமைச்சகம்
ஜல்ஜீவன் இயக்கத்தின் தற்போதைய நிலை
प्रविष्टि तिथि:
08 AUG 2022 3:50PM by PIB Chennai
இந்திய அரசு ஆகஸ்ட் 2019 முதல், மாநில அரசுகளுடன் இணைந்து, 2024-க்குள், கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோம் செய்வதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
ஜல்ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, 3.23 கோடி கிராமப்புற வீடுகள் குடிநீர் குழாய் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 35 மாதங்களில், இதுவரை மொத்தம் 6.70 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 3 2022 அன்றைய நிலவரப்படி, நாட்டிலுள்ள 19.11 கோடி கிராமப்புற குடும்பங்களில், 9.93 கோடி குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1849835
***************
(रिलीज़ आईडी: 1850030)
आगंतुक पटल : 184