ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்

प्रविष्टि तिथि: 08 AUG 2022 3:53PM by PIB Chennai

2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து  கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது.

 இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக  அளித்த பதிலில் தெரிவித்தார்.

***************

(Release ID: 1849838)


(रिलीज़ आईडी: 1849915) आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu