நிதி அமைச்சகம்

தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

Posted On: 06 AUG 2022 3:55PM by PIB Chennai

வருமான வரித்துறையினர் 02.08.2022 அன்று திரைப்படத் துறையுடன் தொடர்புடைய சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களின்  இருப்பிடங்கள் மற்றும் அலுவலகங்களில்  சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

சோதனை நடவடிக்கைகளின் போது, கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல  ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதலின் போது ரகசிய இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட பைனான்சியர்களின்  வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட  கணக்கில் வராத பணக் கடன்கள் தொடர்பான உறுதிப்பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் வரி ஏய்ப்புச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன, ஏனெனில் வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் அதிகம். அவர்களால் உருவாக்கப்படும் கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல், திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், திரையரங்குகளில் இருந்து கணக்கில் வராத பணம் வசூலிக்கப்பட்டதை காட்டுகின்றன. ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் தங்களுக்குள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு மறைத்துவிடுவதால் உண்மையான வருமானம் மறைக்ககப்பட்டுள்ளது.

இதுவரை, தேடுதல் நடவடிக்கையின் விளைவாக கணக்கில் வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ. 200 கோடி, வெளியிடப்படாத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ. 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்  விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

*****



(Release ID: 1849123) Visitor Counter : 297


Read this release in: English , Urdu , Hindi , Telugu