சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் 39வது கூட்டம் நடைபெற்றது

Posted On: 31 JUL 2022 3:29PM by PIB Chennai

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் 39வது கூட்டம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில், புதுதில்லி தேசிய விலங்கியல் பூங்காவில் இன்று நடைபெற்றது.

செயலாளர் திருமிகு லீனா நந்தன், வனத்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறப்பு செயலாளர் திரு சந்திர பிரகாஷ் கோயல், இந்திய வன உயிரியல் நிறுவன இயக்குநர் டாக்டர் எஸ்.பி. யாதவ் உட்பட வனம் , சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சக  அதிகாரிகள், திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியின் பிரதிநிதிகள் மற்றும் பிற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 18 உயிரியல் பூங்காக்கள் மதிப்பீடு செய்யப்பட்டன, உயிரியல் பூங்காக்களுக்கான 10 பெருந்திட்டங்கள்  அங்கீகரிக்கப்பட்டன.

69 தேசிய மற்றும் 10 சர்வதேச விலங்குகள் கையகப்படுத்தல்/பரிமாற்றம் ஆகியவை இந்திய உயிரியல் பூங்காக்களில் பாதுகாப்பு இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வி நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டது.

12 மார்ச் 2021 அன்று பிரதமரால் விடுதலையின் அமிர்தப்பெருவிழா கொண்டாட்டத்தில் நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்கள் தீவிரமாகப் பங்கேற்கின்றன. இந்தத் திட்டம் இன்றுவரை, 72 உயிரியல் பூங்காக்களில் 72 வாரங்களில் 72 உயிரினங்களை உள்ளடக்கியது. நமது நாட்டின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை இது காட்டுகிறது.

கூட்டத்தில், தொழில்நுட்பக் குழு மற்றும் நிர்வாகக் குழுவின் பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மற்ற விவாதங்களில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஆண்டு அறிக்கை (2021-22) மற்றும் இந்திய உயிரியல் பூங்காக்களுக்கு  இடையே விலங்குகளை கையகப்படுத்துதல் / இடமாற்றம் செய்வதற்கான திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான தூதுவர்களை அடையாளம் காணும் முன்மொழிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது உயிரியல் பூங்காக்களால் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறுவதுடன் இந்தத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல துறைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846746

 

******



(Release ID: 1846758) Visitor Counter : 187