பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 20 ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆட்சி மாதிரி ஒவ்வொரு புதிய சவாலிலும் வலுவாக வளர்ந்துள்ளது¬- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 30 JUL 2022 2:59PM by PIB Chennai

கடந்த 20 ஆண்டுகளில், நரேந்திர மோடியின் ஆட்சி மாதிரி ஒவ்வொரு புதிய சவாலுக்கும் மேலாக வலுவாக வளர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” என்ற குழு விவாதத்தில் சிறப்புரை ஆற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், “மோடி@20” இன் சாரத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ள, புத்தகத்தைப் படிப்பது அவசியம் என்றார்.

முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர் பிரதமராக ஆகி உலகிலேயே  20 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே இந்தியத் தலைவர் நரேந்திர மோடி மட்டுமே என்று டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். இரண்டாவதாக, கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்காமல், நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கும் முதலமைச்சர்  என்ற அரிதான நிகழ்வும் மோடிக்குச் சொந்தமானதாகும் என்று அவர் கூறினார். 

எல்லாவற்றிற்கும் மேலாக, 2002ல் மோடி முதலமைச்சராக வருவதற்கு முன், அவர் அரசிலோ அல்லது நிர்வாகத்திலோ எந்தப் பதவியையும் வகித்ததில்லை. மேலும், கடந்த காலங்களில் உள்ளூர் மட்டத்திலோ அல்லது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் மிகப்பெரிய தனிச்சிறப்பு. ,

எனவே, மோடியின் ஆட்சி மாதிரியை 20 ஆண்டுகளாக நிலைநிறுத்துவதற்கும், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் அத்தியாவசியமான காரணிகள் என்ன என்பதை நாம் ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். குறிப்பிடத்தக்க வகையில், வருவாயைக் குறைக்கும் கொள்கையால் பாதிக்கப்படுவதற்குப் பதிலாக, மோடியின் 20 ஆண்டுகால ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டும் அதிக வருமானத்தை அளித்துள்ளது, மேலும் ஒவ்வொரு புதிய சவாலும் இந்த நிர்வாக மாதிரியை வலுவாகவும், பயனுள்ளதாகவும், நீடித்ததாகவும் வெளிவர உதவியது.

குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற உடனேயே, பூஜ்ஜில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம்தான் அவருக்கு முதல் சவாலாக இருந்தது என்றும், அவர் 20 ஆண்டுகால அரசு தலைவராகப் பொறுப்பு வகிக்கும்  நிலையில், அவர் எதிர்கொண்டுள்ள சமீபத்திய சவால் நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் பெருந்தொற்றுநோய் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியில், முன்னாள் தூதர் திரு ஜி.பார்த்தசார்த்தி, சர்வதேச செலாவணி நிதியத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் திரு சுர்ஜித் எஸ். பல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

***************(Release ID: 1846540) Visitor Counter : 67