சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் கழகத்தின் 4வது பட்டமளிப்பு விழாவிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்
Posted On:
30 JUL 2022 3:22PM by PIB Chennai
புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் கழகத்தின் 4வது நிறுவன நாள் மற்றும் பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் குமார் பால், கெளரவ விருந்தினராக டாக்டர் அதுல் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைமை உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, அனைத்து பட்டம் பெற்ற, விருது வென்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சியில் ஊக்குவித்து வழிகாட்டியதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பயிற்சி, வரும் ஆண்டுகளில் நமது குடிமக்களுக்குச் சேவை செய்யும் திறன் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்களை உருவாக்க உதவும் என்றார் அவர்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது முதன்மையான முன்னுரிமையை வலியுறுத்திய அமைச்சர், மருத்துவ வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், தொழில்துறையினர் என அனைத்துப் பங்குதாரர்களும், இந்தியாவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கு தங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியா அதன் சமூக, கலாச்சார மற்றும் பாரம்பரிய கட்டமைப்பில் உள்ளது என்ற கருத்தை உயர்த்திப்பிடித்த அவர், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு அதை ஒரு பெரிய வாய்ப்புக்கான தளமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். நமது பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் சுகாதாரப் பார்வையை நாம் உருவாக்கியுள்ளோம், இந்த தொலைநோக்குப் பார்வை நமது மருத்துவ நிபுணர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளைத் தருவது மட்டுமல்லாமல், நமது தேசத்தைக் கட்டியெழுப்புபவர்கள் அனைவரும் நமது குடிமக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய அனுமதிக்கும் என்றார்.
“தொற்றுநோயை கையாள்வதில் இந்தியாவின் திறனை உலகம் கேள்வி எழுப்பியபோது, நமது தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த நிலைக்கு ஏற்ப செயல்பட்டு, இந்தியாவின் பாரம்பரியத்தை செயலில் காட்டினர். லாக்டவுன் நெறிமுறைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை நமது சிறப்பாகப் பின்பற்றினோம். இது அடுத்த ஆண்டில் நேர்மறையான வளர்ச்சிப் பாதையில் மீண்டும் அடியெடுத்து வைக்கும் முதல் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது’’என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
நாடு அணுகக்கூடிய, மலிவு மற்றும் நோயாளிக்கு உகந்த சுகாதார அமைப்பை நோக்கி நகர்ந்துள்ளது. முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு கூட "அனைவருக்கும் ஆரோக்கியம்" என்பதை உறுதி செய்வதே நமது நோக்கம். எனவே, தரமான கல்வியும் பயிற்சியும் நமது குடிமக்களுக்கான தரமான சுகாதார சேவையாக மாற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் அவர் வலியுறுத்தினார்.
***************
(Release ID: 1846538)
Visitor Counter : 181