வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம்- 2.0, 'பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை ' குறித்த உரையாடலுக்கு ஏற்பாடு

Posted On: 30 JUL 2022 11:45AM by PIB Chennai

தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம்- 2.0, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ், ஜூலை 29 அன்று, 'பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை ' என்ற தலைப்பில் தேசிய கற்றல் வெபினார் தொடரின் நான்காவது அமர்வுக்கு ஏற்பாடு செய்தது. இந்த அத்தியாயத்தின் நோக்கம், 'குப்பையில்லா நகரங்களை' உருவாக்கும் திட்டத்தின் இலக்கை அடைய, பிளாஸ்டிக் கழிவுகளை திறம்பட நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விவாதங்களைத் தூண்டுவதாகும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ' மனதின் குரல் ' தொடரின் மூலம் நாட்டு மக்களிடையே  பேசும் போது, பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கூட்டாக எதிர்த்துப் போராடவும், தூய்மையை வாழ்க்கை முறையாகக் கடைப்பிடிக்கவும் குடிமக்கள் ஒன்றிணைவதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான முதல் அறிவிப்பு ஆகஸ்ட் 15, 2019 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது, மேலும் அவரது 'மனதின் குரல்' உரையின் போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான தேசிய இயக்கத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது, திறந்தவெளி கழிப்பிடம்  இல்லாத இந்தியாவை அவருக்கு அர்ப்பணிப்போம், பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான வெகுஜன இயக்கத்தைத் தொடங்குவோம்... காந்திஜியின் பிறந்தநாள் உத்வேகமாக அமையட்டும். நாம் அனைவரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

அதன் பிறகு, இந்திய நகரங்களும் மாநிலங்களும் ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. தடை அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

செல்வி. ஸ்வச் பாரத் மிஷன் நகர்ப்புற, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், தேசிய தூய்மை இந்தியா இயக்க  இயக்குநருமான செல்வி ரூபா மிஸ்ரா, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இயக்குனர் டாக்டர் சத்யேந்திர குமார், சண்டிகர் மாநகராட்சி ஆணையர் செல்வி அனிந்திதா மித்ரா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846448

***************



(Release ID: 1846485) Visitor Counter : 350


Read this release in: Telugu , English , Urdu , Hindi