ஆயுஷ்
ஜாம் நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையம்
Posted On:
26 JUL 2022 5:08PM by PIB Chennai
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்திய பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக மையத்தை அமைக்க, ஆயுஷ் அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் முதல் உலக மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மருத்துவ மையத்தை அமைப்பதற்கான பூமி பூஜை ஜாம் நகரில் நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்து கொண்டார். இந்த மையத்தை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவ மையத்தின் அனைத்து செலவுகளும் ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக சுகாதார அமைப்புக்கு தேவையான போதிய அலுவலக வளாகங்கள் போன்ற வசதிகளை மத்திய அரசு அளிக்கும். இந்த உலக சுகாதார பாரம்பரிய மருத்துவ மையம் உலகில் உள்ள அனைத்து பாரம்பரிய மருத்துவத்திற்கான ஆதரவை வழங்கும்.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
------
(Release ID: 1845132)
Visitor Counter : 155