உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், மத்திய அரசு ரூ.120 கோடி ஊக்கத்தொகை வழங்குகிறது
Posted On:
25 JUL 2022 4:17PM by PIB Chennai
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் செப்டம்பர் 30 2021 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறும் 23 பயனாளிகளிள் தற்காலிக பட்டியல் 6 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள்:
(1) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதி - ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடி. ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சம்
(2) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாதவர்களுக்கான தகுதி - ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடி ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ரூ.1 கோடி
இந்த தகவல்களை சிவில் விமானப் போக்குவரத்துத்துறையின் இணையமைச்சர் (ஜெனரல்) (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு ) இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844623
***************
(Release ID: 1844751)
Visitor Counter : 280