குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்எஸ்எம்இ-களின் அண்மைக்கால தரவுகள்
प्रविष्टि तिथि:
25 JUL 2022 3:00PM by PIB Chennai
எம்எஸ்எம்இ-க்களின் பதிவு விவரங்கள், பதிவு ரத்து, வேலைவாய்ப்பு ஆகியவற்றை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சகம் உதயம் பதிவு இணையப்பக்கத்தில் பராமரித்து வருகிறது.
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் எம்எஸ்எம்இ துறைக்கு வழங்கியுள்ள கடன் தொகையின் புள்ளி விவரங்கள்படி, கடந்த 3 நிதியாண்டுகளில் அதன் அளவு அதிகரித்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.16,13,582.17 கோடி, 2021 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.17,83,924.80 கோடி, 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.20,22,634.29 கோடி.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானுபிரதாப் சிங் வர்மா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844600
***************
(रिलीज़ आईडी: 1844676)
आगंतुक पटल : 226