உள்துறை அமைச்சகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா
Posted On:
23 JUL 2022 8:04PM by PIB Chennai
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் பதவியேற்பு விழா தில்லி நாடாளுமன்ற மைய அரங்கில் ஜூலை 25, 2022 அன்று காலை 10.15 மணிக்கு நடைபெறும்.
மாநிலங்களவைத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், தூதரக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்வார்கள்.
குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவரும் அணிவகுப்பு மரியாதையுடன் மைய அரங்கிற்கு வருவார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, 21 குண்டு முழக்கங்களுடன் வணக்கம் செலுத்தப்படும். அதன்பிறகு குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார். மைய அரங்கில் நடைபெறும் விழாவின் நிறைவாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844263
********
(Release ID: 1844354)
Visitor Counter : 214