குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் கோவிந்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் இன்று மதிய விருந்தளித்தார்

Posted On: 23 JUL 2022 6:26PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.


திரு கோவிந்த் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்து தெரிவித்த திரு நாயுடு, குடியரசுத் தலைவர் தனது பரந்த பார்வை மற்றும் அன்பு நிறைந்த  எளிமையின் மூலம் தாம் வகித்த பதவிக்கு பெருமை சேர்த்ததாக கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் பல இனிமையான நினைவுகளை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் வளர்ச்சிக்காக குடியரசுத் தலைவர் கோவிந்துடன் இணைந்து பணியாற்றியது தமக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.

********
 


(Release ID: 1844261) Visitor Counter : 200