வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இந்திய சாலையோர வியாபாரிகளின் தேசிய சங்கத்தின் 16-வது கூட்டத்தில் திரு.ஹர்தீப் எஸ் புரி உரை
Posted On:
23 JUL 2022 5:45PM by PIB Chennai
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், சாலையோர வியாபாரிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். புதுதில்லியில், இந்திய சாலையோர வியாபாரிகளின் தேசிய சங்கத்தின் (NASVI) 16-வது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வலிமையான பிணைப்புகள் மற்றும் நகர்ப்புற முறைசாரா பொருளாதாரத்திலும், சாலையோர வியாபாரிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றார்.
‘ஆக்கிரமிப்பாளர்கள் என்ற நிலையிலிருந்து சுய-வேலைவாய்ப்பு பெற்றவர்கள்‘ என்ற இன்றைய கூட்டத்தின் மையக்கருத்து மிகவும் பொருத்தமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, சுய வேலைவாய்ப்பு பெற்றவர்கள், ‘புதிய இந்தியா‘ கனவை நனவாக்குவதற்காக நம்முடன் கூட்டாக பங்களிப்பை வழங்கி வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
பெருந்தொற்று பாதிப்பின்போது, 1 ஜுன், 2020 அன்று பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர், “பிரதமரின் ஸ்வநிதி திட்டம், சுய வேலைவாய்ப்பு, சுய வாழ்வாதாரம் மற்றும் தன்னம்பிக்கை“-யை வழங்குவதாக கூறியதையும் திரு.புரி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடி வரும் வேளையில், நாடு முழுவதுமுள்ள சாலையோர வியாபாரிகளுடன் இணைந்து, ஸ்வநிதி திருவிழாவைக் கொண்டாடுமாறும் அனைத்து மாநிலங்கள், நகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு.புரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844213
***
(Release ID: 1844238)
Visitor Counter : 233