அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறைகளுக்கான 4ஜி/5ஜி தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைகளுக்கான ஜிகாமெஷ் தயாரிப்பு மற்றும் வணிகமயமாக்குவதற்கு, பெங்களூருவைச் சேர்ந்த திருவாளர்கள் அஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரவு

Posted On: 23 JUL 2022 1:52PM by PIB Chennai

பல்வேறு துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், டிஜிட்டல் இணைப்பு முக்கிய இடம் வகிக்கிறது.   டிஜிட்டல் இணைப்பு இல்லாமல், விரைவான வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளதாக தெரிகிறது.  டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்திய உலகளவில் முன்னிலை வகிக்கும் நிலையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், தடையற்ற இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்துவது அவசியமாகிறது.  மின்னணு-ஆளுகை, வெளிப்படைத்தன்மை, தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் போன்றவற்றிற்கு உதவுவதோடு மட்டுமின்றி,  நாட்டு மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது.  

அந்த வகையில்,  இந்தியாவின் கிராமப்புறங்களிலும் தடையற்ற இணையதள இணைப்பை வழங்குவதற்காக, புதுமையான வயர்லஸ் சாதனமான ஜிகாமெஷ் சாதனைத்தை தயாரிக்க, பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான அஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு, மத்திய அறிவியல்-தொழில்நுட்பத்துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரவளித்துள்ளது. 

இணையதள இணைப்பை விரிவுபடுத்துவதற்காக, கிராமங்களுக்கு அருகிலுள்ள   அடுக்குமாடி குடியிருப்புகளில்  சிறிய அளவிலான மற்றும் குறைந்த செலவிலான ஆண்டெனாக்களை நிறுவும் புதுமையான முயற்சிக்காக, இந்த ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது. 

பிரதமரின் 90-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த திருவாளர்கள் அஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி.நேஹா சதக், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்பைப் பெறவுள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1844160

*******



(Release ID: 1844186) Visitor Counter : 168


Read this release in: Hindi , English , Urdu