ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில் நிலையங்களில் விளம்பரங்கள்

Posted On: 22 JUL 2022 3:33PM by PIB Chennai

பயணக் கட்டணம் தவிர்த்த பிற வருவாய்களை உருவாக்கும் வகையில், ரயில் நிலையங்களில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை  / வணிக முத்திரை பெயர்களை ரயில் நிலையங்களின் பெயர்களுக்கு முன்போ, பின்போ பொறிக்க வகை செய்யப்பட்டுள்ளது.   இது விளம்பரத்திற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறதே தவிர  ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் நோக்கம் கொண்டதல்ல.

இந்த வகையில், கொல்கத்தா மெட்ரோ திட்டத்தில் 11 ரயில் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த ரயில் நிலையத்திற்கும் இந்த அனுமதி வழங்கப்படவில்லை.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

***************


(Release ID: 1843973)
Read this release in: English , Urdu