நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைப்பின் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் எவருக்கும் அனுமதி கிடையாது

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2022 6:16PM by PIB Chennai

விளையாட்டு பொம்மைகளில் பத்து பாதுகாப்பு அம்சங்களை  இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ளது. உடல் பாதுகாப்பு, ரசாயனபூச்சுக்கு எதிரான பாதுகாப்பு, தீப்பிடித்தலுக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அது குறிப்பிட்டுள்ளது. பத்து பாதுகாப்பு அம்சங்களில் ஏழு அம்சங்கள் தரக்கட்டுப்பாடு சம்பந்தப்பட்டவை.  இதுகுறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வந்தது.

     இந்திய தர நிர்ணய அமைப்பின் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் அல்லது விநியோகிப்பதற்கும், காட்சிப்படுத்துவதற்கும் எவருக்கும் அனுமதி கிடையாது.  உரிமம் பெறுவதற்கு முன்பாக குழந்தைகள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்வதற்கு பொம்மைகளில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.  ஐஎஸ்ஐ முத்திரை உள்ள பொம்மைகளை மட்டுமே வாங்குவதை நுகர்வோர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843543

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1843576) வருகையாளர் எண்ணிக்கை : 297
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Telugu