ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் சக்தி இயக்கம்

Posted On: 21 JUL 2022 2:41PM by PIB Chennai

ஜல்சக்தி இயக்கம்-I திட்டம், 2019-ல், 1592 வட்டாரங்களில், நாட்டின் 256 வறட்சியான மாவட்டங்களில், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 5 திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. நீர் பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு, பாரம்பரிய மற்றும் பிற நீர் நிலைகளை புதுப்பித்தல், நீரை மறுசுழற்சி செய்தல், நீர்நிலைகள் மேம்பாடு மற்றும் தீவிர காடு வளர்ப்பு மேலும் வட்டார மற்றும் மாவட்ட நீர் பாதுகாப்புத் திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துதல், க்ரிஷி அறிவியல் கேந்திரா திட்டங்கள், நகர்ப்புற கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் அனைத்து கிராமங்களையும் முப்பரிமாண தொழில்நுட்பம் மூலம் கண்காணித்தல் ஆகியவை அடங்கும்.   

பின்னர் ஜல் சக்தி இயக்கம் 2019-ல் விரிவுப்படுத்தப்பட்டு, “ஜல் சக்தி இயக்கம்: மழை நீரை சேகரி” மழை நீரை பிடி - எங்கே விழுந்தாலும், எப்போது விழுந்தாலும் என்ற கருப்பொருளுடன், அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்களையும் உள்ளடக்கியதாக விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843395

 

***************


(Release ID: 1843545) Visitor Counter : 286


Read this release in: English , Urdu