உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் விமான எரிபொருளுக்கான வாட் வரியை குறைத்துள்ளன

Posted On: 21 JUL 2022 2:53PM by PIB Chennai

இந்திய விமான நிலையங்கள், 2021-22-ம் ஆண்டில் 83 மில்லியன் உள்நாட்டு பயணிகளை ஏற்றி சென்றுள்ளன.  இது 2020-21-வுடன் ஒப்பிடும்போது, 59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தொற்று பாதிப்புக்கு முந்தைய உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் சுமார் 136 மில்லியன்(2019-20) உடன் ஒப்பிடும்போது, 2021-22-ல், போக்குவரத்து 39 சதவீதம் குறைந்துள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத் துறையின் வருமானத்தை பாதிக்கும் சவால்களில், விமான எரிபொருளின் அதிக விலை, அந்நிய செலாவணி மாறுபாடு, தடை விதிக்கப்பட்ட விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு, அதிக விலை போன்றவை அடங்கும்.

 பிரச்சினைகளை சமாளிக்க அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகள்:

(1) விமான எரிபொருளின் மீது அதிக வாட் வரி விதித்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அதனை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டன. 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆதரவாக பதில் அளித்தன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, லடாக், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோராம், திரிபுரா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்.

(2) உள்நாட்டு பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843410

 

***************


(Release ID: 1843492) Visitor Counter : 293