தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

மகப்பேறு பயன் திருத்தச்சட்டம் 2017-ன்படி, மகப்பேறு பயன்கள்

Posted On: 21 JUL 2022 2:46PM by PIB Chennai

     மகப்பேறு பயன் சட்டம் 1961-ல் 2017 ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, பணியிடங்களில் குழந்தைகளுக்கான இடவசதி ஆகியவை இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.  சுரங்கங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேலை செய்வோருக்கு இச்சட்டம் பொருந்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.

     தொழிலாளர் அரசு காப்பீட்டு சட்டம் 1948 விதிமுறையின்கீழ் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கும் மகப்பேறு பயன்கள் அளிக்கப்படும்.  அதன்படி, 2019-2020 ஆம் ஆண்டில் 49,200 பேரும், 2020-21-ல் 46,327 பேரும், 2021-22-ல் 45,610 பேரும் மகப்பேறு பயன்களைப் பெற்றுள்ளனர்.   

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக்  காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843404  

*****************



(Release ID: 1843489) Visitor Counter : 509


Read this release in: English , Urdu , Bengali