சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
Posted On:
21 JUL 2022 12:54PM by PIB Chennai
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. ஐந்து கோடி மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 31 நிலையங்களை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
15-வது நிதி ஆணைய காலத்தில், தமிழ்நாடு, பீகார், குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் புதிய பயிற்சி நிலையங்கள் அமைக்க தகுதிபெற்றுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சத்திஷ்கரில் உள்ள நயா ராய்பூரில் ஏற்கனவே ஒரு ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 ஏக்கர் நிலப்பரப்பில் வகுப்பறைகள், அலுவலகம் மற்றும் பணியாளர் அறைகள், ஆய்வகம், பணியிடம், நூலகம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட உள்ளன.
மாநில அரசு இப்பயிற்சி நிலையத்தை ஏற்படுத்தினாலும், அம்மாநில அரசு விரும்பினால், தனியார் துறையினரை இதில் அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843349
***************
(Release ID: 1843467)