நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டைகளின் டிஜிட்டல்மயமாக்கம் நிறைவடைந்துள்ளது

சுமார் 19.5 கோடி குடும்ப அட்டைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன

Posted On: 20 JUL 2022 5:46PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டைகளின் டிஜிட்டல்மயமாக்கம் நிறைவடைந்துள்ளது. சுமார் 19.5 கோடி குடும்ப அட்டைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன என்று மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வெளிப்படைத்தன்மை இணையப்பக்கத்தில் குடும்ப அட்டைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு உட்பட 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் பதிவு 100% நிறைவடைந்துள்ளது. எஞ்சிய குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவை 2022 செப்டம்பர் 30-க்குள் மேற்கொள்ள வேண்டுமென்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1843146

                                                                                                                                ***************

(Release ID: 1843146)



(Release ID: 1843228) Visitor Counter : 215