மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கிராமப்புறங்களில் டிஜிட்டல் எழுத்தறிவு

Posted On: 20 JUL 2022 3:46PM by PIB Chennai

நாடு முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழங்குவதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. இதனடிப்படையில்நாடு முழுவதும் உள்ள 6 கோடி கிராமப்புற குடும்பங்களை (வீட்டுக்கு ஒருவர் வீதம்உள்ளடக்கும் இலக்குடன் கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவை ஏற்படுத்துவதற்காகபிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் சக்சர்தா இயக்கத்துக்கு 2017-ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுவரைமொத்தம் 6.15 கோடி விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து கொண்டு, 5.24 கோடி பேர் பயிற்சி பெற்றுள்ளனர்அவர்களில் 3.89 கோடி விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவு பெறுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6.15 கோடிக்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***************

(Release ID: 1843061)



(Release ID: 1843096) Visitor Counter : 291


Read this release in: English , Urdu , Gujarati