தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகியதன் காரணமாக காலியாக உள்ள இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Posted On: 18 JUL 2022 6:19PM by PIB Chennai

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 31 மார்ச் 2022 ல் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகியீடு எடுத்து ஏற்பட்டுள்ள காலி இடத்திற்கு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிக்கை ஜூலை மாதம் 25ஆம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள். ஆகஸ்ட் இரண்டாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வேட்புமன்களை வாபஸ் வாங்குவதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதியை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842431

***************


(Release ID: 1842460)
Read this release in: English , Urdu , Hindi