மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்தியகுடிமைப்பணி தேர்வாணைய உறுப்பினராக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜென்ரல் ராஜ் சுக்லாபொறுப்பேற்றுக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUL 2022 6:14PM by PIB Chennai

மத்திய குடிமைப்பணி தேர்வாணைய உறுப்பினராக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜென்ரல் ராஜ் சுக்லா பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக் கோட்டு பகுதியையொட்டிய பாரமுல்லா பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி கல்லூரி, செகந்திராபாதில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி, புதுதில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் ராஜ் சுக்லா பயின்றுள்ளார். சிறந்த விமானியாக இருந்த அவர், நல்ல பேச்சாளராகவும் உள்ளார். சுமார் 70 கட்டுரைகளை எழுதியுள்ள அவர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 180-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அவருடைய சேவையை அங்கீகரித்து கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பரம்விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842429

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1842450) வருகையாளர் எண்ணிக்கை : 283
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी