சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

அமிர்தப் பெருவிழாவின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரே நாளில் சுமார் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது

Posted On: 17 JUL 2022 4:58PM by PIB Chennai

'விடுதலையின் அமிர்தப் பெருவிழா ' திட்டத்தின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு தழுவிய மரம் நடும்  இயக்கத்துக்கு ஏற்பாடு செய்து, தேர்வு செய்யப்பட்ட  114 இடங்களில் ஒரே நாளில் சுமார் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது. இந்த  முயற்சியை நாக்பூரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் அமிர்த பெருவிழாவைக் குறிக்கும் வகையில்  ஆகஸ்ட் 15 வரை 75 லட்சம் மரக்கன்றுகளை நடுவதே என்எச்ஏஐயின் நோக்கமாகும்.

திரு கட்காரி தனது உரையில், அமைச்சகம் மரங்களை நடுதல் மற்றும் இடமாற்றம் செய்வதில் கவனம் செலுத்துகிறது என்று கூறினார். இந்த செடிகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில், இந்த மரக்கன்றுகளின் வளர்ச்சியில்  அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட உந்துதலின் நிலையான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் முன்வரவும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கு பெறவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை,  சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் , இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் திருமதி அல்கா உபாத்யாயாஆகியோர் காஜியாபாத்தின் தஸ்னாவில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் மரக்கன்றுகளை நட்டனர். திரு சிங் தனது உரையில், பிரதமரின் தொலைநோக்கு பார்வையின்படி, ஒரு சாத்தியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் இந்த தோட்ட இயக்கம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும் என்று கூறினார்.

விடுதலையின் அமிர்தப்பெருவிழாவையொட்டி என்எச்ஏஐ, தேசிய நெடுஞ்சாலைகள் அருகே தோட்டங்கள் மற்றும் குளங்கள் அல்லது 'அமிர்த நீர்நிலை'களை உருவாக்குதல் உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இது நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரைப் புதுப்பிக்க உதவுகிறது.

***************



(Release ID: 1842217) Visitor Counter : 241