பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சிந்துத்வாஜ் நாட்டுக்கு ஆற்றிய 35 வருட அரிய சேவைக்குப் பிறகு விடைபெற்றது
Posted On:
17 JUL 2022 3:02PM by PIB Chennai
ஐஎன்எஸ் சிந்துத்வாஜ், 35 ஆண்டுகளாக மிகச்சிறந்த முறையில் சேவையாற்றி, ஜூலை 16 சனிக்கிழமையன்று இந்திய கடற்படையிலிருந்து விடைபெற்றது. இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கமாடர் SP சிங் (ஓய்வு) உள்ளிட்ட முன்னாள் காமாண்டிங் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிந்துத்வாஜ் நீர்மூழ்கிக் கப்பல் கடலின் கொடி தாங்கியாக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தற்சார்பு இந்தியா என்னும் இந்திய கடற்படை முயற்சிகளின் நோக்கை நிறைவேற்றும் வகையில் ரஷ்யாவின் சிந்துகோஷ் வகையைச் சேர்ந்ததாகும். உள்நாட்டு சோனார் USHUS, ருக்மணி என்னும் சுதேசி செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எம்எஸ்எஸ், இன்டிரியல் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் உள்நாட்டு டார்பிடோ ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றின் செயல்பாடுகளை இது உள்ளடக்கியதாகும்.
பாரம்பரிய நிகழ்ச்சியானது சூரிய அஸ்தமனத்தில் நடத்தப்பட்டது, 35 வருட சிறப்பான பணிக்குப் பின்னர் நீர்மூழ்கிக் கப்பலானது கடற்படையிலிருந்து விடைபெற்றது.
***************
(Release ID: 1842195)
Visitor Counter : 223