நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், மின்னணு தொழிற்சாலைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறைகள் 2011-ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
16 JUL 2022 3:40PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (இரண்டாவது சட்டத்திருத்தம்) விதிமுறைகள் 2022 வாயிலாக, மின்னணு சாதனங்கள் அடைக்கப்பட்ட பேக்கேஜில் குறிப்பிடாத சில கட்டாய விவரங்களை, க்யூ ஆர் கோட் மூலம் வெளியிடுவதை அனுமதிக்கிறது.
இந்த சட்டத்திருத்தம், விரிவான விவரங்களை தொழில் நிறுவனங்கள் க்யூ ஆர் கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதிக்கிறது. மேலும், பேக்கேஜின் மேல்பகுதியில், முக்கிய விவரங்களை தெளிவாக வெளியிடுவதையும் அனுமதிப்பதோடு, எஞ்சிய விவரங்களை க்யூ ஆர் கோட் வாயிலாக நுகர்வோருக்குத் தெரிவிக்கவும் வகை செய்கிறது. குறிப்பாக, தயாரிப்பாளர் அல்லது பேக்கிங் செய்வோர் அல்லது இறக்குமதியாளரின் முகவரி, அந்தப் பொருளின் பொதுவான பெயர், அளவு, வடிவம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி நீங்கலான நுகர்வோர் சேவை விவரங்களையும் க்யூ ஆர் கோட் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்புவரை, மின்னணு சாதனங்கள் உட்பட, பேக்கிங் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், சட்டரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறை 2011-ன்படி, பேக்கிங் மீது சில விவரங்களை வெளியிடுவது கட்டாயமாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1842006
*******
(रिलीज़ आईडी: 1842021)
आगंतुक पटल : 334