சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தேசிய தலைநகர் பகுதியான தில்லியில், காற்று மாசினை கட்டுப்படுத்த காற்று தர நிர்வாகத்திற்கான ஆணையம் விரிவான கொள்கையை வகுத்துள்ளது

Posted On: 13 JUL 2022 12:57PM by PIB Chennai

தேசிய தலைநகர் பகுதியான தில்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் காற்று மாசினைக் கட்டுப்படுத்த காற்று தர நிர்வாகத்திற்கான ஆணையம் விரிவான கொள்கையை வகுத்துள்ளது. தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள், கட்டுமானம் மற்றும் கட்டடங்கள் இடித்தல், சாலைகள் மற்றும் திறந்த வெளிகளிலிருந்து உருவாகும் தூசு, நகராட்சி பகுதியில் எரிக்கப்படும் திடக்கழிவுகள், பயிர்களின் அடிப்பகுதிகள் எரிக்கப்படுவது போன்றவற்றால் தேசிய தலைநகர் பகுதியில் ஏற்படும் காற்று மாசினை கட்டுப்படுத்துவதற்கு துறை ரீதியான பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் துறைகள், முகமைகள், தேசிய தலைநகர் பிராந்திய மாநில அரசுகள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆகியவற்றுக்கு இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. காற்று தர நிர்வாகத்திற்கான ஆணையம் வடிவமைத்துள்ள கொள்கை,  அனல் மின்  நிலையங்கள், தூய்மையான எரிபொருள்கள், மின்சார வாகனங்கள், பொது போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து நிர்வாகம், மின்சார உற்பத்திக்கான டீசல் எஞ்சின்கள், வெடிகள் வெடித்தல் போன்ற மாசு ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்தும் விவாதித்துள்ளது.

2021 டிசம்பர் 16 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காற்று மாசினை கட்டுப்படுத்தும் நிரந்தர  தீர்வுக்கான நடவடிக்கையாக காற்று தர நிர்வாகத்திற்கான ஆணையம், இத்தகைய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.   இந்த ஆணையத்தின் பரிந்துரைக் கொள்கை உரிய நடவடிக்கைக்காக அரசுத்துறைகளுடன் பகிரப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை ஆவணம், caqm.nic.in என்ற ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841155

-------



(Release ID: 1841199) Visitor Counter : 180


Read this release in: English , Urdu , Hindi , Telugu