இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘சாம்பியனுடன் சந்திப்பு”திட்டத்தின் பலன் வரும் ஆண்டுகளில் வெளிப்படும் என ஒலிம்பிக் வில்வித்தை வீரர்கள் அதானு மற்றும் தீபிகா தகவல்

Posted On: 12 JUL 2022 7:01PM by PIB Chennai

இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ‘சாம்பியனுடன் சந்திப்பு’ திட்டத்தை செவ்வாய்க்கிழமையன்று  தொடங்கியுள்ளனர். ராஞ்சி செயில் நகரியத்தில் உள்ள தில்லி பொதுப்பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் வில்வித்தை வீரர்கள் கலந்துரையாடினர். சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது, விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய தீபிகா குமாரி, பெரும்பாலான மக்களிடம் பரவிவரும் புதுவிதமான வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார். ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் விதமாக, மாணவர்களுடன் கலந்துரையாடுமாறு விளையாட்டு வீரர்கள் பிரதமர் கேட்டுக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.  தமது  குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதையும் அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840986

 

***************


(Release ID: 1841017) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Hindi