புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா, ஐஆர்இடிஏ செயல்பாட்டை ஆய்வுசெய்தார்

Posted On: 12 JUL 2022 2:00PM by PIB Chennai

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா, புதுதில்லியில் உள்ள இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ)-யின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தை நேற்று பார்வையிட்டார். இந்த முகமையின் செயல்பாடு மற்றும் எதிர்கால செயல் திட்டத்தை ஆய்வு செய்த திரு கூபா, மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

     அமைச்சரவையும், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளையும் வரவேற்ற ஐஆர்இடிஏ தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு பிரதீப் குமார் தாஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஆர்இடிஏ-யின் மிகச்சிறந்த செயல்பாட்டையும் எதிர்கால திட்டங்களையும் விவரித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வணிகத்தை எளிதாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும், பல்வேறு துறைகளுக்கு நிதிஒதுக்கீடு, நிதி திரட்டுதல் திட்டம் ஆகியவையும் திரு கூபாவிடம் எடுத்துரைக்கப்பட்டன.  புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறைக்கான பெருமளவு நிதித்தேவை பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

     ஐஆர்இடிஏ-வை மினி ரத்னாவிலிருந்து நவ ரத்னாவாகவும், பட்டியல் பி-யிலிருந்து பட்டியல் – ஏ-க்கு மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி பற்றி அமைச்சர் திரு கூபா பகிர்ந்து கொண்டார். இந்த நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதற்கான திட்டம் விரைவுபடுத்தப்படும் என்றும் மாண்புமிகு அமைச்சர் உறுதியளித்தார். தொழில்துறையின் முன்னோடியாக விளங்கும் ஐஆர்இடிஏ-வை பாராட்டிய திரு பகவந்த் கூபா, இதன் தொடக்க காலத்திலிருந்தே புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறைக்கு சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  கொவிட் பெருந்தொற்று காரணமாக மோசமான வணிகச்சூழலையும் கடந்து சென்ற இரண்டு ஆண்டுகளில் ஐஆர்இடிஏ-வின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டை அவர் பாராட்டினார்.     

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840903

**************



(Release ID: 1840997) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Kannada