இந்திய போட்டிகள் ஆணையம்

ஆக்டிஸ் சோலெனர்ஜி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஷெல் நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்களான பி.வி., சோலெனர்ஜி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை வாங்க சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 12 JUL 2022 11:34AM by PIB Chennai

ஆக்டிஸ் சோலெனர்ஜி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ஷெல் நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டாளர்களான பி.வி.,(வாங்கும் நிறுவனம்) சோலெனர்ஜி பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை(டார்கெட்) வாங்க இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) அதன் 2022 சட்டப்பிரிவு 31(1) பிரிவின்கீழ், நேற்று (11.07.2022) ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் 100 சதவீத பங்குகளைப் பெற்று, வாங்கும் நிறுவனம் டார்கெட்டின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பர்.

வாங்கும் நிறுவனம் ஷெல் குழுமத்தின் ஒருபகுதியாகவும், நெதர்லாந்தில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகவும் உள்ளது. ஷெல் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொந்த முதலீடுகளைக் கொண்டுள்ளது. ஷெல் நிறுவனங்களின் பங்குகள் லண்டன் பங்குச்சந்தை, ஈரோநெக்ஸ்ட் ஆம்ஸ்டர்டாம், நியூயார்க் பங்குச்சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ளன.  ஷெல் குழுமம் 70-க்கும் அதிகமான நாடுகளில் 83,000 ஊழியர்களுடன் எரிசக்தி மற்றும் பெட்ரோ ரசாயன நிறுவனங்களின் உலகளாவிய குழுமமாக உள்ளது.

டார்கெட் நிறுவனம் மொரீஷியஸில் இணைக்கப்பட்டுள்ள ஆக்டிஸ் குழுவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமாகும்.  இது தற்போது இந்தியாவின் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் முதலீடுகளைக் கொண்டுள்ளது.   

***



(Release ID: 1840900) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Marathi , Hindi