அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வைரஸ் தொற்றுக்கும் மூளை புற்றுநோய் தீவிரமடைவதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஐஐடி இந்தூரில் ஆய்வு

Posted On: 11 JUL 2022 3:33PM by PIB Chennai

புற்றுநோயை உண்டாக்கும் எப்ஸ்டீன் பார் வைரஸ் (EBV) கிருமி  நரம்பு செல்களைத் தாக்கி, கொழுப்பு அமிலங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதக் கூறுகள் போன்ற உயிரி மூலக்கூறுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது மத்திய நரம்பு மண்டலம் மற்றும் மூளை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எப்ஸ்டீன் பார் வைரஸ் (EBV - ஈபிவி )  வைரஸ் மனிதர்களுக்கிடயே மக்கள்தொகையில் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை, ஆனால் நோயெதிர்ப்பு சக்தியில் பாதிப்பு அல்லது நோயெதிர்ப்புத் திறன் குறைதல் போன்ற சில அசாதாரண நிலைகளில் இந்த வைரஸ் உடலுக்குள் மீண்டும் செயல்பட நேரிடுகிறது. இது புர்கிட்டி லிம்போமா (Burkitt’s lymphoma) என்று அழைக்கப்படும் நிணநீர் மண்டல புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மல்டிபிள் களரோசிஸ் (multiple sclerosis) எனும் தண்டுவட மரப்பு நோய் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். முந்தைய ஆய்வுகள் பல்வேறு நரம்பு சிதைவு நோய்களில் ஈபிவி ஈடுபாட்டின் தொடர்பினை குறித்து விளக்கம் அளித்தன. இருப்பினும், இந்த வைரஸ் மூளையின் செல்களை எவ்வாறு பாதிக்கிறது, அவற்றை எவ்வாறு மாற்றுகிறது என்பது இன்னும் ஆராயப்படவில்லை.

ஐஐடி இந்தூரைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சிக் குழு, புற்றுநோயை உண்டாக்கும் இந்த வைரஸின் தாக்கத்தின் சாத்தியங்கள் மூளை செல்களில் எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய ராமன் மைக்ரோஸ்பெக்ட்ரோஸ்கோபி டெக்னிக் எனும் நுண் நிறமாலையியல் நுட்பத்தைப் பயன்படுத்தியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்ப மேம்படுத்துவதற்கான நிதியின் கீழ் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஏசிஎஸ் கெமிக்கல் நியூரோ சயின்ஸ் இதழில் இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வைரஸ் தாக்கத்தினால் நரம்பணு உயிரணுக்களில் உள்ள பல்வேறு உயிர் மூலக்கூறுகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதைக் காட்டுகிறது. கூடுதலாக, மற்ற ஆதரவு மூளை செல்களில் (அதாவது ஆஸ்ட்ரோசைட் மற்றும் மைக்ரோக்லியா) காணப்பட்ட மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இந்த மாற்றங்கள் வேறுபட்டவையாக உள்ள.

இந்த ஆய்வின் விரிவான அறிக்கையை இந்த இணைப்பு மூலம் காணலாம்: https://pubs.acs.org/doi/full/10.1021/acschemneuro.2c00081

 

***************



(Release ID: 1840790) Visitor Counter : 281


Read this release in: English , Urdu , Hindi , Marathi